சமகால அரசாங்கம் சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறவில்லை – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, December 1st, 2020
சமகால அரசாங்கம் சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கூறவில்லை. யாரும் அப்படி கூறவில்லை. சமூக வலைத்தள பக்கங்களில் உள்ளவர்களே அவ்வாறு கூறினார்கள். பொறுப்பு கூற வேண்டிய ஒருவரும் அவ்வாறு தெரிவித்ததாக நான் நினைக்கவில்லை.
அத்துடன் சிங்கள பௌத்த வாக்குகளில் நான் ஜனாதிபதி ஆனேன் என மாத்திரமே பதவி பிரமாணத்தின் போது ஜனாதிபதி கூறினார்.
அவ்வாறு கூறியது உண்மை. நாங்களும் அவ்வாறு கூறியுள்ளோம். எங்கள் கட்சி அனைத்து இன மதத்திற்குமான கட்சி. எனினும் இதில் அதிகமானோர் சிங்கள பௌத்தர்களாகும். எங்களுக்கு அவர்களே வாக்களித்தார்கள்.அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தேர்தல் முடிவுகள் மூலம் அதனை உணர முடியும். அதனால் நாங்கள் வேறு இன மதத்தினரை உள்ளடக்க மாட்டோம் என கூற மாட்டோம் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


