சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய் – இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்காக சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 180 நாட்களுக்காக கடன் அடிப்படையில் 6 கட்டங்களாக நாட்டுக்கு மசகு எண்ணெய் கொண்டு வரப்படவுள்ளது.
இதன் முதலாவது தொகுதி எதிர்வரும் ஜனவரி மாதம் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் நாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டிற்கு எரிபொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகை செலவிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கையின் அந்திய செலாவணி கையிருப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே, சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்வரும் 3 ஆம் திகதிமுதல் மூட வேண்டிய நிலை ஏற்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|