சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இன்று!

நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலை தொடர்பில், நாடாளுமன்றில் இன்று (04) சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த விவாதம், பிற்பகல் 5 மணிவரை இடம்பெறவுள்ளது
கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, இந்த வார நாடாளுமன்ற அமர்வுகள், இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்றும் நாளையும் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளைய தினம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பையும் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வீட்டாரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!
அரசின் சட்ட அறிவுறுத்தல்கள் நிதி நிறுவனங்களுக்கு கிடையாதா? நுண் நிதி நிறுவன வசூலிப்பாளர்களால் அவமானப...
புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|