சனல் 4 காணொளி ஏன் தற்போது வெளியிடப்பட்டது – அமைச்சர் மனுஷ நாணயக்கார கேள்வி!
Monday, September 18th, 2023
சனல் 4 காணொளி தற்சமயம் ஏன் வெளியிடப்பட்டது என்ற கேள்விகள் உள்ளன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை.
இந்த அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம். முறையான விசாரணைகள் மூலமாக மட்டுமே குற்றவாளி யார் என்பதை நிரூபிக்க முடியும்.
குற்றவாளியை கண்டுபிடித்து குற்றவாளியை தண்டிக்கும் பொழுது அரசாங்கம் என்ற ரீதியில் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்.
சனல் 4 காணொளியின் உண்மை மற்றும் போலி தொடர்பிலும், இந்த நேரத்தில் ஏன் காணொளியை வெளியிட்டுள்ளார்கள் என்பது தொடர்பிலும் பிரச்சினை உள்ளது.
ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடர் கூடும்போது, நமது நாட்டுக்கு எதிராக குரல் எழுப்பப்படும் போது ஒரு நாடு என்ற வகையில் எமக்கு தீங்கு விளைவிக்க அனைவரும் ஒன்றிணைந்தால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள்.
நாங்கள் நாட்டின் பக்கம் உள்ளோம். ஆனால் குற்றவாளிகளின் பக்கம் இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


