சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, June 22nd, 2023சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 125 முதல் 130 ரூபாவரையில் விற்பனை செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
220 ரூபாவுக்கு கட்டுப்பாடு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கும் குறைந்த விலையிலேயே அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.
இதனை உரிய வகையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமுர்த்தி கொடுப்பனவிற்காக 44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
மக்களின் வாக்குகளால் ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் முயற்சி - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பு...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை - பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
|
|
|


