சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, June 22nd, 2023

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 125 முதல் 130 ரூபாவரையில் விற்பனை செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

220 ரூபாவுக்கு கட்டுப்பாடு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கும் குறைந்த விலையிலேயே அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.

இதனை உரிய வகையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: