சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க முயற்சி!

Friday, August 18th, 2017

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் ஊழியர்களை அதிகரிப்பதற்காக புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் அரச உயர் சட்டத்தரணிகள் 47 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ள பத்மசிறி ஜயமான்ன கடந்த ஒரு ஆண்டிற்குள் வழக்குத் தாக்கல் செய்தல், சட்ட மா அதிபரின் ஆலோசனை வழங்கல் போன்றவற்றை விரைவுபடுத்துவதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் முறையான வேலைத்திட்டம் காணப்பட்டதாக கூறினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்குகளை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது திருப்தியடையும் விதத்தில் இருப்பதாகவும், வருங்காலத்தில் ஊழியர்களை அதிகரித்துக் கொள்வதால் மிகவும் சிறந்த முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன கூறினார்.

Related posts: