சட்டவிரோத மணல் அகழ்வு: மதில் இடிந்துவிழுந்து அரியாலையில் ஒருவர் பலி!
Friday, October 16th, 2020
அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் மதில் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே மதில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
புதிய கருத்தாடல் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு சமகால ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது - ஊடக பிரதியமைச்ச...
சிறைக்காவல்துறை பிரிவு ஸ்தாபிப்பு!
விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
|
|
|


