சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு காலக்கெடு!

கம்பஹா மாவட்டத்தில் சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக அரசாங்கம் பொதுமக்களுக்கு காலக்கெடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத ஆயுதங்களை கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இந்த மாதம் 6ஆம் திகதி வரை ஒப்படைப்பதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இதுவரை 84 சட்டவிரோத ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிகளவான ஆயுதங்கள் கம்பஹா மாவட்டத்திலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 21 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த மாதம் 6ஆம் திகதிக்குப் பிறகு சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|