சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

மூன்று கொள்கலன்களின் மூலம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பாதணிகளை கொழும்பு துறைமுகத்தில் சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுங்க வருவாய் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று பிற்பகல் குறித்த கொள்கலன்களை பரீட்சிக்கும் போதே அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றின் பெறுமதி சுமார் 1.2 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் குறித்த பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்க ஊடக பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளருமான சுதத் டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீனவர் மரணம் குறித்து முழு விசாரணை - ஜனாதிபதி!
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்!
அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் ...
|
|