சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் – றெமீடியஸ் தெரிவிப்பு!

2012 ஆம் அப்போதைய யாழ் மாநகர முதல்வருக்கும் வடபிராந்திய போக்குவரத்து சபையினருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே யாழ் நகர பழக்கடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவை சட்டத்துக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் என்று கூறுவதை ஈழ மககள் ஜனநாயகக் கட்சி வன்மையாக கண்டிப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் சுட்டிக்காட்டினார்
பல காலமாக இருந்து வருகிற யாழ் நகர பகுதியில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடை தொகுதி பிரச்சினையை தொடர்பில் மேலும் கூறுகையில் –
முதலில் அவர்களுக்கு ஒரு இடத்தை தெரிவு செய்து அதன் பின்னர் நடவடிக்கை தொடரவேண்டும். அதே நேரத்தில் புதிய இடத்தை தெரிவு செய்வதற்கு யாழ் மாநகர சபையின் அங்கத்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு குறித்த கடை பிரதிநிதிகளை ஒன்றிணைத்து புதிய இடத்தை தெரிவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|