சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலமானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது என இலங்கைச்சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டீ.சில்வா இதைத்தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் திகதி மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலம் 3ல்2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சில சட்டமூலங்களை நிறைவேற்றும் போது பின்பற்ற வேண்டிய சட்டவரையறைகள் இதன்போது பின்பற்றப்படவில்லை என்றுஅவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் சட்டத்துக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கிணற்றிலிருந்து பெண்னொருவரின் சடலம் மீட்பு: மகன் கைது!
அபராதம் தொடர்பில் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை !
|
|