சஞ்சய் ராஜரட்ணம் இவ்வாரம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்பார்!
Sunday, May 23rd, 2021
பதில் மன்றாடியர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இந்த வாரம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ளார்.
அவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை நேற்றுமுன்தினம் இணக்கம் வெளியிட்டது.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நாளை தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதிக்கு சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேரா ஓய்வு பெற்ற பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு பதில் மன்றாடியர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தலைப் பின்தள்ளுவது ஜனநாயக விரோதச் செயல்- கூறுகிறார் மகிந்த தேசப்பிரிய!
இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச...
தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்றின் முடிவு வரும்வரை உள்ளூராட்சி சபை தேர்தல் ஆவணங்கள் எவையும் அச்ச...
|
|
|


