சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை; 10 கோடி அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
Tuesday, February 14th, 2017
அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்றும், அதன்படி, மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசியை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலாவை விடுவிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தை திறப்பதற்கு நடவடிக்கை!
ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றியது நான் தான் - நாமல் குமார !
நுகர்வோர் அதிகார சபை அதிரடிச் சோதனை- அபராதமாக இதுவரை 111 மில்லியன் வசூலிக்கப்பட்டதாக தகவல்!
|
|
|


