சகல தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!
Sunday, April 23rd, 2023
எந்த நேரத்திலும், எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். கட்சி என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்வோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் சனிக்கிழமை (22) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சி தீர்மானத்துக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார், ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.தற்போதைய பதவி நிலையே தொடரும் என்றார்.
கட்சியின் யாப்புக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவரை நியமிக்க முடியாது என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார் என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.இதற்கு பதிலளித்த அவர் சுயாதீனமற்றவர் என்றார்.
அத்துடன் எந்த நேரத்திலும்,எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் சகல சவால்களையும் எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


