க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகவுள்ள திகதி!
 Saturday, March 2nd, 2019
        
                    Saturday, March 2nd, 2019
            
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் இதனைத் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை இடம்பெற்றது.
நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இந்தப் பரீட்சையில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்ச்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதல் இலவச Wi-Fi!
மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமானது - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        