க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!

Wednesday, May 5th, 2021

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய குறித்த மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அத்துடன் கலைப் பிரிவில் தெஹிவளை ப்ரிஸ்பைடேரியன் மகளிர் கல்லூரியை சேர்ந்த சாமல்கா செவ்மினி, தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

வர்த்தகப் பிரிவில் காலி சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தை சேர்ந்த அமந்த்தி மதநாயக்க தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அவர் முதலாம் இடத்தை பிடித்துள்ளார். கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 194,297 பேர் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டன் கீழ் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 625 பேர் பரீட்சைக்கு தோற்றியதோடு அவர்களில் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் 24,146 பேர் பரீட்சைக்கு தோற்றியதோடு அவர்களில் 15,960 பேர் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க தெரிவாகியுள்ளனர்.

இதற்கமைய பரீட்சைக்கு தோற்றிய 3,171 பரீட்ச்சார்த்திகளில் 64 சதவீதமானோர் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Related posts: