பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!
Monday, May 21st, 2018
பசுக்கள் வதை செய்யப்படுவதற்கு எதிராகவும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராகவும் தென்மராட்சி பொது அமைப்புக்கள் சில சாவகச்சேரியில் கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தன.
இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன் ஆரம்பித்து நகரசபையை சென்றடைந்தது. பசுக்களை வதைக்காதே, இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதை தடை செய், இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடு போன்ற கோசங்களை கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பியிருந்தனர்.
இதன்போது சாவகச்சேரி பிரதேச செயலருக்கும் நகராட்சி மன்றத் தவிசாளருக்கும் பசு வதைக்கு எதிராகவும் இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கோரியும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
Related posts:
இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கை மலேசிய மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு!
எதிர்வரும் 19 ஆம் திகதி உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
இலங்கை வருகின்றார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் - இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஆழம...
|
|
|


