க.பொ.த உயர்தரம் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடம்!

Friday, June 1st, 2018

இலங்கையில் க.பொ,த உயர்தர பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு வள நிலையத்தின் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனை குறிப்பிட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மல்லைத்தீவு மாவட்டம் போருக்கு பின்னர் பல்வேறு தேவைகளை கொண்ட மாவட்டமாகும். அவ்வாறே புது குடியிருப்பு பிரதேசமும் காணப்படுகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. எதிர்கால எமது சமூகத்தின் சந்ததியின் வாழ்க்கையில் கல்விதான் அவர்களுடைய மூலதனமாக காணப்படுகிறது.

படித்து விட்டு வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்கள், யுவதிகளுக்கு உதவு நோக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள புதுகுடியிருப்பு  மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் வள நிலையத்தை அமைக்க முன்வந்துள்ளது.

அரச அதிபர் மேலும் உரையாற்றும் போது கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தோர் என்பதை பார்க்கும் போது முல்லைத்தீவு மாவட்டம் 69 வீதமானவர்கள் சித்தி பெற்று இலங்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  இது முல்லைத்தீவு மாவட்டம் கல்வி ரீதியில் விருத்தியடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இதில் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவு போன்று பொது அமைப்புக்களின் ஆதரவு மாணவர்களுக்கு கிடைக்கும் போது மேலும் நல்ல பொறுபேறுகளை பெற்று முன்னேற்றத்தை அடையும் சூழல் உருவாக்கும் என்றார்.

Related posts: