கோழி முட்டையின் விலை சடுதியாக உயர்வு – பேக்கரி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
Saturday, September 5th, 2020
கோழி முட்டையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பேக்கரி உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது உள்நாட்டு சந்தையில் கோழி முட்டையின் விலையில் பாரியளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக 23 – 28 ரூபா வரையான விலையில் கோழி முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அதனை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் கோழி முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்படத்தக்கது.
Related posts:
பழுதடைந்த பரிசிற்றமோல் விற்பனை: யாழ்.நகரில் மருந்தகத்துக்கு சீல்!
மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்!
வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் ...
|
|
|


