கோழி உரித்து இறைச்சி விற்க தடை – வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஏனைய பகுதிகளில் உரித்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அது எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச சபை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய வருமான வரிச் சட்டம் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியம்!
ஓய்வு பெற்ற கடற்படை தளபதி சின்னையாவிற்கு உயர்வு பதவி!
ஊரடங்குச் சட்ட நடைமுறையால் நாடுமுழுவதும் முடக்கம்!
|
|