கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி – உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Monday, January 3rd, 2022
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாயிலிருந்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முட்டையொன்றின் விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 26 ரூபாயாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீர் மின்னுற்பத்தி நிலைய ஆய்வு நடவடிக்கைகள் பூர்த்தி!
கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்...
மலேசியாவில் 10,000 இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு வழங்க அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்!
|
|
|


