கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது
இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், ஆண்டு முழுவதும் சராசரியாக சுமார் 220 முதல் 230 மில்லியன் கிலோ கோழி இறைச்சியே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி மேலும் சாதனை படைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
அத்திரலிய ரத்தின தேரரின் கடும் அழுத்தம் காரணமாக பதவி விலகிய ஆளுநர்கள்!
இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !
|
|