இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !

Sunday, May 17th, 2020

எதிர்வரும் 20ஆம் திகதிமுதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தமது இயல்பான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு வரையறுக்கப்பட்ட சேவைகளையே மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய வாடிக்கையாளர்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளதுடன் திணைக்களத்தினால் வழங்கப்படும் திகதியில் சென்று தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலத்தில் வாகனப்பதிவுகள், சாரதி அனுமதிப்பத்திர வழங்கல், வாகன பரிசோதனை சான்றிதழ்களை வழங்கல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த காலப்பகுதிக்கு சலுகைக் காலமொன்று வழங்கப்பட்டுள்ளதால் அநாவசிய நெரிசல்களைத் தவிர்த்து அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயமாகப் பின்பற்றி, சுகாதாரப் பாதுகாப்புகளைக் கைக்கொண்டும். பொறுமையுடனும், பொறுப்புடனும் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் திகதியொன்றை ஒதுக்கிக்கொள்ளும்போது அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் உரிய திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறே இத்திணைக்களத்தினால் திகதியொன்று ஒதுக்கப்படுதல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் ஒரு அனுமதி எனக் கருதிக் கொள்ளுதல் கூடாது என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: