கோர விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி!
Thursday, October 18th, 2018
வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மரியதாஸ் நிறோசன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன், செ.அயந்தன் எனும் நபரின் கையொன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய உழவு இயந்திரம் தரித்து நின்றது.
கொழும்பில் இருந்து யாழ். நோக்கி தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற குளிரூட்டப்பட்ட வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை மோதியது.
குறித்த விபத்தில் தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் பயணம் செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர்...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


