கோதுமை மா விலை குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

இந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலையை 250 ரூபா வரையில் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இந்த வாரத்தில் இருந்து தொடர்ந்தும் நாட்டிற்கு கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
வடக்கின் முக்கிய மாவட்டமான கிளிநொச்சியில் தீயணைப்புப் படை!
வெளிநாட்டில் இருந்து க.பொ.த பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி?
இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|