கோதுமை மா தட்டுப்பாடு 15 உடன் நிறைவுக்கு வரும் – அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை!
Wednesday, September 7th, 2022
தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு, எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர், முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன, எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால், 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தாங்களும், நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
பொலிஸ் ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!
முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பில் வருகின்றது புதிய விதிமுறை!
|
|
|


