கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை – இரணுவ தளபதி !

Wednesday, August 1st, 2018

யாழ் ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க யாழ் ஒல்லாந்தர் கோட்டையினை (01) நேரில் சென்று பார்iவிட்டதுடன், அங்குள்ள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

கோட்டையினை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்படடுவருவதுடன் இராணுவத்திற்கு எதிராக அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும்நிலையில் இராணுவத்தளபதி இன்று (01) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி கோட்டையினை நேரில் வருகை தந்து பார்வையிட்டதுடன், கோட்டைப் பகுதியில் பாதுகாப்பின் நிமித்தம் நீண்டகாலமாக தங்கியுள்ள இராணுவத்தினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை.
யாழ் நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த இருபத்தைந்து வருடங்களிற்கும் மேலாக சிறு அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டதுடன் இது நாட்டின் எல்லா பகுதிகளிமுள்ளதொரு சாதாரண நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்
அதேவேளை, எந்நேரத்திலும் கோட்டைக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முழு சுதந்திரம் உண்டு எனவும், பொது மக்கள் கோட்டையை பார்வையிடுவதற்கு இராணுவம் எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்-

அத்துடன் இராணுவத்தினரிடமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுவ தளபதி விரைவில் மேலும் சொற்ப நிலங்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சியும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts:

நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்துகள் வியாழன் நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பு – பரீட்சார்த்திகள் ...
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் புதர்மண்டிக் காணப்படும் பகுதிகள் வேலணை பிரதேச சபையால் துப்பரவாக...
கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - பொலிஸ் ஊடகப் பேச்சா...