கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை!
Saturday, August 6th, 2022
முன்னாள் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு மேலும் 14 நாட்கள் அனுமதி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக. தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய எதிர்வரும் 11ம் திகதி விசா காலம் நிறைவடைந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார்.
எனினும் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய கோட்டாபய இந்த மாத இறுதி வரையில் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போராட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 14 ஆம் திகதி சிங்கப்பூரிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறப்புற நடைபெற்ற வட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!
யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
|
|
|


