புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!

Tuesday, July 4th, 2017

மாலபே சைட்டம் நிறுவனம் மனித உடற்கூறுகளை வைத்திருந்தமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி இலவச சுகாதார சேவைக்கான மக்கள் அமைப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இலங்கை மருத்துவச் சபை நியமித்த குழு இந்த தகவலை கண்டறிந்துள்ளதால், இது சம்பந்தமாக உடனடியாக பொருத்தமான விசாரணைகளை ஆரம்பித்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

26 மனித உடல்களை வைத்திருந்தமை சம்பந்தமாக சைட்டம் தலைவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் அதன் உப வேந்தர் ஆனந்த சமரசேகர ஆகியோரை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏழு மாதங்களுக்கு இது சம்பந்தமாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாகவும் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

Related posts: