கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் -03 வருடங்களுக்குள் நிறைவடையமெனவும் தெரிவிப்பு!
Wednesday, November 9th, 2022
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
03 வருடங்களுக்குள் மேற்கு முனைய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவின் அதானி குழுமம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி.வடக்கில் விடுவித்த பகுதிகளில் மீள்குடியமர 724 குடும்பங்கள் பதிவு!
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன...
உலகின் தலைசிறந்த 20 விஞ்ஞானிகளில் இரண்டு இலங்கைர்கள் -“Research.com” நடத்திய ஆய்வில் தகவல்!
|
|
|


