இலங்கையில் வேகமாக பரவி வரும் கோவிட் வைரஸ் – பொதுமக்களுக்கு வைத்திய அதிகாரிகளால் விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, August 11th, 2022

இலங்கையில் தற்போது BA.4 மற்றும் BA.5 ஆபத்தான கோவிட் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருவதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கோவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசகர் வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் தற்போது பரவிவரும் BA.4 மற்றும் BA.5 கோவிட் வைரஸ் தொற்றுக்கள் மிகவும் ஆபத்தானவை.இந்த வைரஸ் தொற்றாளர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் வைரஸாகும். எனவே அனைவரும் கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான செயற்பாடாகும்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் வைரஸ் பரவ ஆரம்பிக்குமாயின் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: