கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!
Tuesday, March 2nd, 2021
இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரம் முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வயது 18 நிரம்பினாலும் தாமதிக்கிறது வாக்காளர் பதிவு !
தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றம் - திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்தில்மாற்ற ஒப்பந்த...
|
|
|


