கொழும்பு துறைமுகத்தில் கனேடிய போர்க்கப்பல்

Monday, May 22nd, 2017

எச்.எம்.சி.எஸ் வின்னிபெக் (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பயிற்சி மற்றும் நல்லெண்ணத்தை  மையமாக கொண்டே பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இந்தோ ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஆறு மாதங்கள் தரித்து நிற்கவுள்ள கனேடியப் போர்க்கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். இதன்போது சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளிலும் கனேடியக் கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.​

Related posts:

பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் குறுந்தகவல் வசதியை பயன்படுத்தலாம் - யாழ். அரச அதிபர் அறிவிப்பு!
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்ப...
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி – வடக்கு உள்’ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணை...