கொழும்பு தாக்குதலின் பின்னணியில் ஐ.ஐ.எஸ்?

Monday, April 22nd, 2019

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த தாக்குதலில் 218 பேர் உயிரிழந்துள்ளதுடன், 450 பேர் வரையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர் குண்டு வெடிப்புகள் தற்கொலை குண்டு தாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று எட்டு இடங்களில் ஒன்பது குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் முதல் ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்களும் குறுகிய நேர இடைவெளியில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது வரையிலும், இந்த தாக்குதல் சம்பவங்ளுக்கு எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. இந்நிலையிலேயே, குறித்த தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: