கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு : 5 பேர் படுகாயம்!!
Monday, December 10th, 2018
கொழும்பு – முகத்துவாரம் – பஞ்ஞானந்த மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது
முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபர்கள் மீது உந்துருளியில் வந்தவர்கள் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
வழக்கு விசாரணையொன்று நிறைவடைந்து மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீதே இன்று பிற்பகல் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனம்!
சமூக வலைத்தளங்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை - அமைச்சர் கயந்த கருணாதிலக!
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் - மத்திய சுற்றாடல்...
|
|
|


