கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, July 19th, 2022

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறுகிய அறிவித்தலில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் எச்சரித்துள்ளது.

இதேவேளை கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பெரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில், தமது குடிமக்கள், ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, எல்லா நேரங்களிலும் தம்முடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லவேண்டும். என்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவேண்டும் என்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

எனவே பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டியதன் அவசியத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமது குடிமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்,எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகள் மற்றும் திட்டமிட்ட மின்வெட்டு போன்றவற்றையும் சந்திக்கலாம் என தமது சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: