கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு – சுங்க தொழிற்சங்க ஒன்றியம்!
Wednesday, February 6th, 2019
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன்களைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 3 நாட்களுக்குள் நிறைவுசெய்யப்படும் என, சுங்க தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்கியுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக புறக்கோட்டையில் உள்ள சகல மொத்த வியாபார நிலையங்களும் நேற்று மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்சங்க நடவடிக்கையினால் 6,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாளை முதலாம் தவணை விடுமுறை!
நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் - நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !
இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கி வருவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு!
|
|
|


