கொரோனா வைரஸ்: முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் – அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
Tuesday, March 3rd, 2020
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான இலங்கையரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
46 வயதுடைய இலங்கை பெண் ஒருவருக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான குறித்த இலங்கை பெண் Brascia வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 97 மில்லியன் அமெரிக்க டொலர்!
பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் - பாடப் புத்த...
பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|
|


