கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய முதலாவது நாடாக இலங்கை – ஜனாதிபதி !
Saturday, March 14th, 2020
உலகின் அனைத்து நாடுகளை விடவும் முதலாவதாக சிறப்பான கொரோனா வைரஸ் தடுப்பு முறை இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகில் வெற்றிகரமாக கொரோனா தடுப்பு முறையாக இலங்கையின் முறையே உள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நாடுகளை விடவும் இலங்கையிலேயே முதலாவதாக தடுப்பு முறை ஆாரம்பிக்கப்பட்டது. நாங்கள் தான் வெற்றியுடன் மேற்கொண்டுள்ளோம்.
ஆனால் நாங்கள் செய்வதனை ஏனையவர்கள் செய்கின்றார்கள். நாங்கள் டாஸ்க் போர்ஸ் ஆரம்பிக்கும் போது யாரும் செய்யவில்லை. அன்று முதலே நாங்கள் சுகாதார அமைச்சிற்கு பல விடயங்களை செய்துள்ளோம்.
நாங்கள் அனைத்திற்கும் தயாராகினோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
Related posts:
சார்க் மாநாட்டை புறக்கணிக்கவில்லை – அரசு!
டி.கே.பி.தசநாயக்க கைது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்!
துறைமுக அதிகார சபையின் கீழ் கிழக்கு முனையம் முழுமையாக பராமரிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ரரஜபக்ச உறுத...
|
|
|


