இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்!

Wednesday, November 1st, 2023

இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  356 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல்3  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  423 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை  356 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சுப்பர் டீசல் 14  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  431 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு - தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது - அமைச்ச...
புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவருக்கும் நிம்மதியான வாழ்வு கிடைத்தது - இராணுவ தளபதி தெரி...
மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுக...