கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை – சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
Thursday, April 23rd, 2020
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாட்டிற்காகவும், தங்களின் பிள்ளைகளுக்காகவும் சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கடைப்பிடித்து செயற்படுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது ஊரடங்கு சட்டம் பல மாவட்டங்களில் தளர்ப்பட்டுள்ளது. அதன்காரணமாக கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் இருந்து நீங்கியதனை போன்றே பல இடங்களில் மக்கள் செயற்படுகின்றனர்.
சில இடங்களில் முச்சக்கர வண்டியில் 3, 4 பேர் பயணிக்கின்றனர். சில இடங்களில் சமூக இடைவெளிகள் இல்லாமல் செயற்படுகின்றார்கள். இந்த ஊரடங்கு சட்டம் மக்களுக்காக எடுக்கப்பட்ட செயற்பாடாகும். எனவே சுகாதாரத்தரப்பு அவங்கம் ஆலோசனைகளை கடுமையாக பின்பற்றுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக...
அரச நிறுவனங்கள் - பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அவதானம்!
வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை - வெளிநாட்...
|
|
|


