கொரோனா வைரஸால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! நாசா வெளியிட்ட செயற்கைகோள் படம்!

Sunday, April 12th, 2020

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதால் உலக மக்கள் அதிக உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன் இயற்கையிலும் சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகளின் செயலிழப்பு ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதனிடையே, இருபது ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் காணப்படுகின்றன. தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்லாத நிலையில் வனவிலங்குகள் சுதந்திரமாக திரிவதாகவும் செய்திகள் கூறுகின்றன

Related posts:

யாழ்ப்பாணத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்த...
சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலாள...
போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!