கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 281 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை 87,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரணகமவின் அறிக்கை ஜூலையில் கையளிப்பு!
மன்னார் வளைகுடாவில் ஒரு இலட்சம் கோடி கன அடியிலும் அதிக எரிவாயு - கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு...
இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் - மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை ம...
|
|