கொரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்தலுக்காக மேலும் 2913 பேர் பதிவு – பிரதி பொலிஸ் மா அதிபர்!

Thursday, April 2nd, 2020

கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக, மேலும் 2913 பேர் பதிவு செய்யப்ப்டிருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள நேற்று(01) நண்பகல் வரை பாதகாப்பு பிரிவினாரால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தலில் இருந்து இடைவிலகியோர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்வதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பதிவு செய்யாதவர்கள் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

Related posts: