கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு – புதிதாக ஆயிரத்து 573 பேருக்கும் தொற்றுறுதி – தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!
Monday, July 5th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 25 பெண்களும் 20 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 573 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 65 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 317 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 29 ஆயிரத்து 77 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முயற்சியை கைவிட்டார் சுசந்திகா!
பாதுகாப்பு அமைச்சின் கீழ் 6 நிறுவனங்களை கொண்டு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
தற்காலிக ஏற்பாடே 20 ஆவது திருத்தம்: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


