கொரோனா : பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது – வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளதாக வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 35 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 588 பேர் பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 793ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 333 பேர் புதிதாக இன்று அடையாளம் காணப்பட்டவர்கள்.
அத்துடன் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 97 ஆயிரத்து 689 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு 10 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளனர்
Related posts:
கட்சி செயலாளர்கள் மற்றும் பெபரல் அமைப்புடன் தேர்தல் ஆணைக்குழு தலைவர் சந்திப்பு
இலங்கை துறைமுகத்தில் வெளிநாட்டு கடற்படைக் கப்பல்!
சட்டத்துறையில் 50 வருடங்கள் பணி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 'அபிநந்தன' விருது வழங்கி கௌரவிப்ப...
|
|