சட்டத்துறையில் 50 வருடங்கள் பணி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு!

Monday, March 13th, 2023

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிநந்தன விருது விழா நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு அபிநந்தன விருது வழங்கினார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு – 2023 இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன. கனகரத்னம் கணேஸயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: