கொரோனா பரவல் – சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தில் இலங்கை!
Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனா பரவல் வேகம் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
தினமும் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் பிரபல Worldometers இணையத்தளத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நேபாளத்திலேயே அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அதிகரிப்பு 105 வீதமாகும்.
அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இந்தியாவில் கோவிட் பரவலின் வேகம், அந்த நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 11 வீதமாகும். அது தெற்காசியாவில் குறைந்த நோயாளர்களின் வீதமாகும்.
அதற்கமைய இந்த பட்டியலில் முதலாது இடத்தை நேபாளமும், இரண்டாவது இடத்தில் இலங்கையும் மூன்றாவது இடத்தில் மாலைத்தீவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
Related posts:
சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள் - யாழ்.போதனாவின் பணிப்பாளர்!
உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை!
பாடசாலைகளில் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பம் - சுற்றறிக்கை வெளியிடப்படும் என க...
|
|
|


