கொரோனா தொற்று: உலகில் ஒரு மில்லியனை தாண்டிய நோயாளர்கள்!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருக்கிறது.
கொரோனா வைரஸ் உயிரிழப்புக்கள் 51ஆயிரமாக உயர்ந்ததுள்ளன. ஜோன் ஹொப்ஹின்ஸ் பல்கலைக்கழகம் இதனை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக தகவல்படி இதுவரை 208ஆயிரம்பேர் இந்த தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் 950பேர் கொரோனாவினால் காவு கொள்ளப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 10ஆயிரத்து 3பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவே இதுவரை கொரோனா வைரஸினால் நாடு ஒன்றில் ஏற்பட்ட அதிக உயிரிழப்பாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில், வீட்டில் இருந்து வெளியேறும்போது அனைவரும் முகக்கவசங்களை அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்த மாத முடிவின்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2069பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 156பேர் குணமடைந்துள்ளனர். 53பேர் மரணமாகினர்.
நேற்று தமிழகம் உட்பட்ட ஏனைய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் பலர் உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தொகை இன்னும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 234பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6பேர் குணமடைந்துள்ளனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாராஸ்டிராவில் 13பேர் பலியாகியுள்ளனர்.
Related posts:
|
|